நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
#சந்திரயான்-2 #CaptainNews | #TamilNews
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய மேலதிக ஆய்வுகளை செய்வதற்காக சந்திரயான்-2 திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த 15-ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் சந்திரயான்-2 செயற்கைக்கோளை சுமந்து செல்ல இருந்தது.
விண்கலம் விண்ணில் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். விண்கலம் ஏவும் லான்ச்பேட் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சந்திரயான் மறுபடியும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தமுறை சந்திராயன்-2 விண்கலம் உறுதியாக விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. asrock a320m-hdv | |
| 3 Likes | 3 Dislikes |
| 23 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 20 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét