திருப்பதி லட்டின் வயது 302 - திருப்பதி தேவஸ்தானம்
#திருப்பதி #CaptainNews | #TamilNews
திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 302 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில் வைக்கப்படும். இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு, 1715ம் ஆண்டு, ஆகஸ்ட் 2ல், துவக்கப்பட்டது. இந்நிலையில், லட்டு பிரசாதத்திற்கு, இன்று 302 வயதாகிறது.
கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு, மாதம், ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
திருப்பதி லட்டின் வயது 302 - திருப்பதி தேவஸ்தானம் camera iphone 8 plus apk | |
| 4 Likes | 4 Dislikes |
| 61 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 2 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét